அழகு கோலம் அவள் முகம்.
நெற்றியில் சுட்டி,
அதை தொடர்ந்து
ஜொலிக்கும் கற்கள்
நிறைந்த ராக்கொடி.
மனக்கும் வாசனை,
ஜாதி மல்லி
கொத்துக் கொத்தாக
நீண்ட கறுமுடியின் மீது
ஊஞ்சல் ஆடியது.
பின்னலிட்ட முடிக்கு
மேலும் அழகு,
முற்றுப்புள்ளி வைத்த
மூன்று குண்டுகள்
கொண்ட குஞ்சம்.
அசைந்தாடும் ஜடைக்கு
தாலம் தட்டும்,
கலக்கலவென சிரிக்கும்,
வெலள்ளிக் கொலுசு.
ஆர் அடி காஞ்சிப்பட்டு
மெல்லிய இடையை சுற்றியது.
அடக்கமான தங்க ஒட்டியானம்
நச்சுன்னு இடுப்பில் நிற்க,
கையில் அழகிய
வண்ணங்களில் காப்புகள்
குலுங்கி, இங்கும் அங்கும் துள்ள,
கழுத்து நிறைந்த மாலைகள்
நெற்றி நிறைந்த குங்குமம்.
ஆனால் இத்தனை அழகை விட,
உதட்டில் புண்ணகையும்
கண்களில் பிரகாசமும்
கைகள் இனைந்து கூறிய வணக்கம்
அழகில் அழகு.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இத்தனை அழகு இருந்தும், இக்கவிதையில் உள்ள சொற் பிழைகளை விட எந்த அழகும் இருக்க முடியாது!!! ;)
கிண்டலுக்கு அப்பால், ரொம்ப நன்றாக இருந்தது!
ஹீஹீ, நன்றி
பிழைகளை திருத்த முயன்றேன்.....ஏதாவது இன்னும் இருக்கா?
நான் என்ன வாத்தியா, எல்லா பிழைகளையும் கண்டுபிடிப்பதற்கு? ;p
Post a Comment