சாதுமிரண்டா பொழுதுப்போக்கு
எதிர்பாராத திருப்பங்கள், மிகழ வைக்கும் நகைச்சுவை, மற்றும் பொதுவாக வர தமிழ் படங்களை விட சுமாரான நடிப்பு.
ஒரே ஒரு வங்கியில் நட்ந்த கொள்ளையை வைத்து முழுப்படமும் மறுமமாக நகர்கிறது. யார் இதற்கு பொருப்பு என்பதை கூற இயக்குனர் மூன்று மணி நேரம் எடுத்திருக்கிறார்.
பிரசண்ணாவுடைய, அழகிய தீயே, கண்ட நாள் முதல், என்ற படங்களை நினைவில் கொண்டு, இப்படத்திலும் அவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று எண்ணி ஏமாந்துவிட்டேன். முதல் பாதியில் சாதுவாக ஓர் அளவுக்கு நகைச்சுவையை உண்டாக்கினாலும், இரண்டாம் பாதியில் எரிச்சலை மற்றும் தான் கிழப்புகிறார். அது என்ன தாடி? குரங்கிற்கு ஒப்பிடலாம். அது மட்டுமில்லை, முதலாம் பாதியில், சாது வேடத்திற்கு, கஜனி 'சஞ்ஜை ராம்சாமி' யை மிக குரைவான ரூபாய்க்கு கடன் வாங்கியது போல் தோன்றுகிறது.
கதாநாயகி துனிச்சலான, புதுமைப்பெனாக கானப்பட்டதும் ஒரு வேஷம் தான். என்னடா, வழக்கத்துக்கு மாறாக, நமது தமிழ் சினிமாவில், ஒரு பெண்ணுக்கு இத்தனை துனிச்ச்லான், அறிவுள்ள கதாப்பாத்திரம் கொடுத்திருக்காங்க என்று நாம் எமாந்துப்போவதற்கு முன்பே, இயக்குனர், இது சராசரி கதாநாயகி என்று சொல்லாமல் சொல்கிறார். முதலில் எதையும் கேள்விக் கேட்கும் பிரியா, இறுதியில் யார் எதை சொன்னால் நம்பும், கோழைப் பெண்ணாகவே வணக்கம் கூறி விடைப்பெருகிறாள்.
ஆமா, இந்த படத்திற்கு ஒப்பனையாளர் யார்? அவர் மட்டும் என் கையில் கிடைத்தால்.....பிரிசன்னாவை தாடி வளர்க்க வைத்து கிழவனாகினீர்கள், ஏன் கதாநாயகி மேல் கூட கவனம் செலுத்தவில்லையா? ஒரே ஒரு காட்சி தவிர, அதுவும் பாட்டில், முழுப்படத்துக்கு ஏதோ shampoo add பார்கிறோமோ என்ற குழப்பத்தை ஏற்படவிடலாமா? ஒப்புக்கொள்கிறேன், கதாநாயகிக்கு அடர்த்தியான அழகான முடி. ஆனால் அதற்காக, மூன்று மனி நேரத்திற்கும், அதே hairstyleஐ காட்டி எங்களை போர் அடிப்பது நியாயமா?
கதைக்கு plus நகைச்சுவை. அதை கதை ஊடகமாகவே கொண்டுவர முயற்சிசெய்த்தது பாராட்டக்கூடியது. முக்கியமாக கருநாஸ் கழக்கியிருக்கிறார்.
பாடல்களில் ஒரு பாட்டு சுமார்.
மீதிமிச்ச்ம...... வில்லன் கதாபாத்திரத்தில் ஆபாஸ் வந்தது ஆச்சிரியம். ஆனால் இயக்குனர் இன்னும் கொஞ்க கவனம் செலுத்தியிருந்தால், இது இறுதி வரை, முழு ரகசியமாக இருந்திருக்கும். ஆனால், படத்தை பாருங்கள். இன்னொரு திருப்பம் உன்மையில் எதிர்பார்க்காதவை. அதுமட்டுமின்றி, பிரசன்னாவுக்கும் கதைக்கும் என்ன சமந்தம் என்பதையும் அறிய நீங்கள் கிட்ட தட்ட 3 மினி நேரம் பார்க்கவேனும். பார்த்துவிட்டு, இதிலும் அதே மசாலாவான sentinimentஆ என்று என்னை திட்டக்கூடாது.
படத்தை நகைச்சுவைக்கு மட்டுமே பார்க்கவேண்டும். பிரிச்ன்னா, கதை, என்ரெல்லாம் பெரிய கனவுகள் கானாதீர்கள்.
அச்சோ மறந்துட்டேனே! படத்திற்கு யாரோ contact lense company sponser பன்ணியிருக்க வேணும். நாயகன் நாயகியிலிருந்து, வில்லன், குனசித்திர் நடிகர்கள் வரை எல்லோரும், ஒவ்வொரு வடிவத்தில் விவ்வேறு நிரங்களில் இந்த லென்சை அனிந்திருக்கிறார்கள். சிறிது சுகமில்லை. அதுவும் அதை பல மடங்கு அதிகரிக்கும் மாதிரி அத்தனை closeups