Life is a camera, Face it with a smile
A smile is like saying hello without any words.


Tuesday, 26 February 2008

கல்லூரி திரைவிமர்சனம்

கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வருகின்றனர். அவ்வழியில் இதுவும் ஒரு முயற்சி.
அழகான, ஆழமான, புதுமையான கதைக்கும், இயல்பான நடிகர்களுக்கும் ஒரு சதம்.
சொதப்பலான முடிவுக்கு மைனஸ் மார்க்ஸ்.

காதலுக்கும் நட்புக்கும் இடையில் உள்ள போறாட்டங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில், மாணவர்களின் வேருபபட்ட சூழலிலும், படிப்புக்கு முக்கியதுவம் கொடுக்கும் போறாட்டங்களும் ரசிக்கும் வகையில் இயக்குனர் அமைத்துள்ளார். குறிப்பாக, கதாநாயகி, ஷோபனா, தன்னுடைய சூழலையும், கதாநாயகன், முத்துவின் வாழ்க்கையை வேருப்படித்து, கவனத்தை சிதற விடாமல், வெற்றி பெற ஊக்க்கிவிக்கும் காட்சி அருமை.

அத்தனை நடிகர்களும் புது முகங்கள். ஆனால், இது குறை அல்ல. பிரமாண்டம் இல்லாமல், இயல்பான, உண்மையான் சம்பவங்களை பார்க்கும் உனர்வு ஏற்பட்டது. அதுவும், நடிகர்களின் அருமையான நடிப்பு இதற்கு இன்னொரு காரனம். குறிப்பாக, கயல்விழியுடைய கதாபாத்திரம் மனதைக்கொள்ளைக்கொண்டது.

ஆன் பெண் விதயாசம் இல்லாமல் பழகும் நண்பர்களை பார்த்து நமக்கு புறாமையாய் இருக்கும். அந்த நட்பிற்குள் வரும் சின்னஞ்சிறு பிறச்சனைகள், சுகங்கள், துக்கங்கள் மனதை நெகிழ வைத்துள்ளனர். படத்தின் மூலம், காதலும், ஒரு விதத்தில், பசுமையான நட்பிர்க்கு தடை என்றும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர். பல காட்சிகளில், இந்த பசுமையான நட்புக்கு வள்ர்ச்சி, பெற்றோரின் ஆதர்வும் தான், என்று அறிய முடிகிறது. கயல்விழி ஷொபனாவை எச்சரிக்கும் பொழுது, மனது உறுத்துகிறது. ' மற்றவர்கள் தப்பா நினைக்கின்ற மாதிரி, நாம் ஏன் நடந்துக்கொள்ள வேண்டும்?' என்றாள். நல்ல நட்புக்கு எத்தனை தடைகள். கடந்த தலைமுறையின் குறுகிய பார்வைகள், எந்தளவுக்கு இளய தலைமுறையை பாதிக்கின்றது என்று இது மூலம் தெரிகிறது.

படத்துக்கு பாடல்கள் பக்க பலம்! குறிப்பாக ஜூன் ஜூலை மாதம், பூக்கம் பூ... என்று பாட்டு பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமை!


நகைச்சுவையும் களக்கல். 'நீ சொல்றா' என்று மாற்றி மாற்றி இரு நடிகர்களும் சொல்வது அறுக்காம்ல், கதைக்கு ஏற்ற பானியில் அமைந்திருந்தது.

படத்தின் முடிவு புரியாத ஒரு புதிர். பொதுவாக எனக்கு சோகமான முடிவுகள் பிடிக்காது. ஆனால், அதையும் தான்டி இந்த முடிவு எனக்கு கோழத்தனமாக தோன்றியது. எவ்வளவு ஆழமான கதைக்கு விடை தறாமல், பார்வையாலர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது நியாயமா? எரிச்சல் என்னவென்றால், முடிவு கதைக்கு கொஞ்சம் கூட சம்மந்தமில்லை. ஒரு வேலை இயக்குனர், மாயமாக, மாணவர்கள் எவ்வளவு பொருப்பாக இருந்தாலும், சமூதாயம் அவர்களை தண்டித்து விடும் என்று சொல்லவருகிறாரா? ஒன்னும் புரியவில்லை.

இன்னொரு சிறு உறுத்தல். மாணவி உயர்ந்த கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும், நட்புக்கு முதல் இடம் கொடுக்கிறால், தனது எதிர்காலத்தை மறந்து. இது சரியா தவறா என்று விவாதிக்கனும். ஆனால் இதை இன்னொருக் கோனத்தில் எடுத்துக்கொள்ளலாம். இன்றைய தலைமுறை, மதிப்பு கெளரவம் என்றெல்லாம் மறந்து, இன்றைய நாளிற்காக் வாழ்கின்றனர் என்ற மாதிரி எடுத்துக்கலாம்.

கல்லூரி, பெயருக்கு ஏற்ப அருமையான் கல்லூரி கதை. 'கல்லூரி' நட்பா, காதலா என்று முடிவு செய்வது உங்கள் கைகளில்!

No comments: